• 91 94868 75899

Service

ஸ்ரீ அய்யனார் டிரஸ்ட் சேவைகள்

இந்தியா முழுவதும் உள்ள பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலங்களில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி அன்று அன்னதானம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்கள், திவ்ய ஸ்தலங்கள், புகழ் பெற்ற அம்மன் ஸ்தலங்களில் கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உள்ள முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து வருகிறோம்.

இந்தியாவில் உள்ள ஆதரவு அற்ற சிறுவர்கள் குழைந்தைகள் இல்லங்களில் வாழும் சிறுவர்கள் மற்றும் குழைந்தகளுக்கு உணவு, உடை, கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்துவருகிறோம்.

வறுமை கோடுக்கு கீழ் மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப கல்வி மற்றும் உயர் கல்வி உதவிகளை செய்துவருகிறோம்.

ஆதரவு அற்றோர், காது கேளாதோர் மற்றும் ஊனமுற்ற மக்களுக்கு இலவச,மருத்துவ உதவி, இலவச கருவிகள் போன்ற உதவிகளை செய்துவருகிறோம்.

வறுமை கோடுக்கு கீழ் மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச திருமண உதவிகளை செய்துவருகிறோம்.

ஏழை மக்களுக்கு தொழில் மற்றும் வாழ்வாதர உதவிகளை செய்துவருகிறோம்.

வெள்ளம், புயல், சுனாமி போன்ற பேர் இடர்வு காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்துவருகிறோம்.

அடிப்படை வசதியற்ற மற்றும் பின்தங்கிய கிராமங்களை முன்னேற்றமடைய தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.

ஸ்ரீ அய்யனார் டிரஸ்ட்

ஸ்ரீ அய்யனார் கோவில் ஸ்தாபகரும் ஸ்ரீ அய்யனார் குரூப்ஸ் நிர்வாகியுமனா ஓம் ஸ்ரீ மாரியப்பன் சுவாமிகள் அவர்கள் 2000-ம் ஆண்டு மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று தான் கட்டிய கோவிலில் ஸ்ரீ அய்யனார் சுவாமியுடன் ஜீவ ஐக்கியமானார். அவர் ஐக்கியமான மஹா சிவராத்திரி அன்று குரு பூஜை விழாவாக நடைபெற்று வருகிறது. மேலும் மஹா சிவராத்திரி அன்று ஆண்டு தோறும் அவர் நினைவாக ஸ்ரீ அய்யனார் டிரஸ்ட் சார்பாக கிழ்கண்ட பல்வேறு சேவைகள் செய்துவருகிறோம்.

சமுதாய மற்றும் ஆன்மீக பணிகளை இறைவன் உத்திரவு படி செய்து வருகிறோம்.