• 91 94868 75899

About

ஸ்ரீ அய்யனார் திருக்கோவில்

ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் ஸ்தாபகரும் அய்யனார் குரூப்ஸ் நிர்வாகியுமான ஓம் ஸ்ரீ மாரியப்பன் சுவாமிகள் அவர்கள் தென் மாவட்டத்தில் சாத்தூர் அருகில் சங்கராபுரம் கிராமத்தில் 1936-ம் ஆண்டு பாலையா ஆனந்தம்மாள் தம்பதியருக்கு 5-வது மகனாக அவதரித்தார். தனது இளம் வயதிலேயே ஞானத்துடன் விளங்கினார். 1946-ம் ஆண்டு கோவைக்கு வந்தார். இரவு பகலாக பாடுப்பட்டு தனது குடும்பத்தை முன்னேற செய்தார். தொழிலில் பெயரும் புகழும் பெற்று விளங்கினார். அவர் தான தர்மகங்களில் கொடைவள்ளலாக திகழ்ந்தார். தனது இனிமையான பேச்சினாலும் புன் சிரிப்பின்னாலும் எலலரையும் கவர்ந்தார்.

நகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு பாரம்பரியமான காசு மாலை நகை தயாரிப்பில் தென்னிந்தியாவில் முன்னணியில் சிறந்து விளங்கினார். காசு மாலை, மாங்காய் மாலை, கொடி காசு மாலை ஆகியவற்றில் No.1 Specialist Manufacturer ஆக இருந்தார். இவரது கை வண்ணத்தில் உருவான ஆபரணங்கள் பல நாடுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டது. நகை தொழிலில் வெற்றிக்கு முக்கிய காரணம் அயராத உழைப்பினாலும், தொழிலில் மீது பக்தினாலும் BIS 916 HALLMARK அறிமுகம் செய்வதற்கு முன்பே நகை தொழிலில் தரம் மற்றும் தூய்மையான ஆபரணங்கள்களை மக்களுக்கு செய்துவந்தார். இதன் .மூலம் நகை தொழிலில் South Indian No.1 Jewel Manufacturing- ல் புகழ் பெற்றார். இரவு பகலாக பாடுப்பட்டு தொழிலில் பெயரும் புகழும் பெற்று விளங்கினார்.

ஓம் ஸ்ரீ மாரியப்பன் சுவாமிகள் அவர்கள் சிறு வயதிலே ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்தார். காளியம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். . காளியம்மன் உத்தரவின்படி 1999-ம் ஆண்டு கோவை குறிச்சி குளக்கரையோரத்தில் ஸ்ரீ பூர்ணா தேவி, ஸ்ரீ புஷ்கலா தேவி சமேத ஹரி-ஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி, காசி காலபைரவர் சுவாமி திருக்கோவிலை கட்டி மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் நீதியரசர்கள் தலைமையில் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்தார்கள். 2000-ம் ஆண்டு மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று தான் கட்டிய கோவிலில் ஸ்ரீ அய்யனார் சுவாமியுடன் ஜீவ ஐக்கியமானார். அவர் ஜீவ ஐக்கியமான மஹா சிவராத்திரி அன்று குரு பூஜை விழாவாக நடைபெற்றுவருகிறது. மேலும் காசி, ரிஷிகேஷ், மதுரா போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மஹா சிவராத்திரி அன்று ஆண்டு தோறும் அவர் நினைவாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது. இத்திருக்கோவிலில் ஒவ்வாரு மஹா சிவராத்திரி நள்ளிரவு அன்று சித்தர்களும், யோகிகளும் வந்துசெல்வதாகவும் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலுக்கு அனைத்து சமூதாயத்தினரும் வழிப்பட்டு வருகிறார்கள்.

ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் ஸ்தாபகரும் எங்கள் தந்தையுமான ஓம் ஸ்ரீ மாரியப்பன் சுவாமிகள் அவர்களின் உத்தரவுப்படி எக்ஸ்ப்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு BMS EXPORTS என்றும் மற்ற நிறுவனங்களுக்கு எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அய்யனார் சுவாமி பெயரிலேயே செய்துவரும் தொழிலுக்கும், புதியதா ஆரம்பிக்கும் நிறுவனத்திற்கும் ஸ்ரீ அய்யனார் சுவாமி பெயர் வைக்கவேண்டும் இவை அனைத்தும் ஸ்ரீ அய்யனார் குரூப்ஸ் கீழ் செயல்படவேண்டும் என்பது ஸ்ரீ அய்யனார் சுவாமியின் உத்தரவு. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீ அய்யனார் திருக்கோவில், ஸ்ரீ அய்யனார் ஜீவல்லர்ஸ், ஸ்ரீ அய்யனார் பைனாஸ், ஸ்ரீ அய்யனார் அண்டு கம்பெனி மற்றும் ஸ்ரீ அய்யனார் புட்ஸ் அண்டு ஸ்பைசஸ் போன்ற நிறுவனங்களை நடத்திவருகிறோம்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து சக்திகள் ஓருங்கே இணைந்து இவன் தோன்றியதால், ஐயன் என்று இவன் வழங்கப்படுவான். பூலோக மக்கள் இவனை ஸ்ரீ ஐய்யனார் என்று போற்றி வணங்குவர்,

காளியம்மன் உத்தரவின்படி 1999-ம் ஆண்டு கோவை குறிச்சி குளக்கரையோரத்தில் ஸ்ரீ பூர்ணா தேவி, ஸ்ரீ புஷ்கலா தேவி சமேத ஹரி-ஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி, காசி காலபைரவர் சுவாமி திருக்கோவிலை கட்டி மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் நீதியரசர்கள் தலைமையில் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்தார்கள்.

செல்வ கணபதி பூஜை
மாத சிவராத்திரி
பௌர்ணமி பூஜை
கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி
கால பைரவர் – சத்ரு சம்கார பூஜை
மஹா சிவராத்திரி விழா & குரு பூஜை விழா
பங்குனி உத்திரம் பூஜை
தை மாதம், ஆடி மாதம் அமாவாசை
தை பூசம் முருகன் பூஜை
மாங்கல்ய பூஜை
ஸ்ரீ பாலமுருகன் பூஜை
ஸ்ரீ அய்யனார் சுவாமி பூஜை
ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் பூஜை

1.காசி காலபைரவர் சுவாமி கிழக்கு நோக்கி தனி சன்னதியில் கோவில் கொண்டுள்ளார்.
2.இத்திருக்கோவில் காளியம்மன் உத்தரவின் படி உருவானது.
3.இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மாத சிவராத்திரி நள்ளிரவு அன்று சித்தர்களும், யோகிகளும் வந்து செல்வதாகவும் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4.ஸ்ரீ அய்யனார் கோவில் ஸ்தாபகரும் ஸ்ரீ அய்யனார் குரூப்ஸ் நிர்வாகியுமனா ஓம் ஸ்ரீ மாரியப்பன் அவர்கள் 2000-ம் ஆண்டு மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று தான் கட்டிய கோவிலில் ஸ்ரீ அய்யனார் சுவாமியுடன் ஜீவ ஐக்கியமானார். அவர் ஐக்கியமான மஹா சிவராத்திரி அன்று குரு பூஜை விழாவாக நடைபெற்றுவருகிறது. மேலும் காசி, ரிஷிகேஷ், மதுரா போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மஹா சிவராத்திரி அன்று ஆண்டு தோறும் அவர் நினைவாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.

FREE FOOD SERVICES
TEMPLE RENOVATION & ANNADHANAM
OLD AGE HOME
CHILDRENS HOME
EDUCATIONAL SUPPORT
FREE MEDICAL SERVICES
POOR PEOPLE MARRIAGE SUPPORT
POOR FAMIL SUPPORT
FOR THE SICK PEOPLE
VILLAGE DEVELOPMENT

இத்திருக்கோவில் தல விருட்சம் சக்தியின் அம்சமாக வேப்பமரம் உள்ளது.


ஸ்ரீ அய்யனார் டிரஸ்ட்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்என்னும் ஐந்து சக்திகள் ஓருங்கே இணைந்து இவன் தோன்றியதால், ஐயன் என்று இவன் வழங்கப்படுவான். பூலோக மக்கள் இவனை ஸ்ரீ ஐய்யனார் என்று போற்றி வணங்குவர்

FREE FOOD SERVICES
TEMPLE RENOVATION & ANNADHANAM
OLD AGE HOME
CHILDRENS HOME
EDUCATIONAL SUPPORT
FREE MEDICAL SERVICES
POOR PEOPLE MARRIAGE SUPPORT
POOR FAMIL SUPPORT
FOR THE SICK PEOPLE
VILLAGE DEVELOPMENT



View Full Gallery

சமுதாய மற்றும் ஆன்மீக பணிகளை இறைவன் உத்திரவு படி செய்து வருகிறோம்.