பூஜை பண்டிகை

ஸ்ரீ அய்யனார் டிரஸ்ட்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்என்னும் ஐந்து சக்திகள் ஓருங்கே இணைந்து இவன் தோன்றியதால், ஐயன் என்று இவன் வழங்கப்படுவான். பூலோக மக்கள் இவனை ஸ்ரீ ஐய்யனார் என்று போற்றி வணங்குவர்

FREE FOOD SERVICES
TEMPLE RENOVATION & ANNADHANAM
OLD AGE HOME
CHILDRENS HOME
EDUCATIONAL SUPPORT
FREE MEDICAL SERVICES
POOR PEOPLE MARRIAGE SUPPORT
POOR FAMIL SUPPORT
FOR THE SICK PEOPLE
VILLAGE DEVELOPMENT

ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலுக்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

ஓம் ஸ்ரீ மாரியப்பன் சுவாமிகள் அவர்கள் சிறு வயதிலே ஆன்மீகத்தில் ஈடுபட்டு வந்தார். காளியம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். காளியம்மன் உத்தரவின்படி 1999-ம் ஆண்டு கோவை குறிச்சி குளக்கரையோரத்தில் ஸ்ரீ பூர்ணா தேவி, ஸ்ரீ புஷ்கலா தேவி சமேத ஹரி-ஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி,காசி காலபைரவர் சுவாமி திருக்கோவிலை கட்டி மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் நீதியரசர்கள் தலைமையில் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் செய்தார்கள். 2000-ம் ஆண்டு மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று தான் கட்டிய கோவிலில் ஸ்ரீ அய்யனார் சுவாமியுடன் ஜீவ ஐக்கியமானார். அவர் ஜீவ ஐக்கியமான மஹா சிவராத்திரி அன்று குரு பூஜை விழாவாக நடைபெற்றுவருகிறது. மேலும் காசி, ரிஷிகேஷ், மதுரா போன்ற 350-க்கும்  மேற்பட்ட புண்ணிய ஸ்தலங்களில் மஹா சிவராத்திரி அன்று ஆண்டு தோறும் அவர் நினைவாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது. இத்திருக்கோவிலில் ஒவ்வாரு மஹா சிவராத்திரி நள்ளிரவு அன்று சித்தர்களும், யோகிகளும் வந்துசெல்வதாகவும் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருக்கோவிலுக்கு அனைத்து சமூதாயத்தினரும் வழிப்பட்டு வருகிறார்கள்.

ஸ்ரீ அய்யனார் திருக்கோவில்ன் சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள் 1

காசி காலபைரவர் சுவாமி கிழக்கு நோக்கி தனி சன்னதியில் கோவில் கொண்டுள்ளார்.

சிறப்பு அம்சங்கள் 2

இத்திருக்கோவில் காளியம்மன் உத்தரவின் படி உருவானது.

சிறப்பு அம்சங்கள் 3

இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மாத சிவராத்திரி நள்ளிரவு அன்று சித்தர்களும், யோகிகளும் வந்து செல்வதாகவும் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

சிறப்பு அம்சங்கள் 4

ஸ்ரீ அய்யனார் கோவில் ஸ்தாபகரும் ஸ்ரீ அய்யனார் குரூப்ஸ் நிர்வாகியுமனா ஓம் ஸ்ரீ மாரியப்பன் அவர்கள் 2000-ம் ஆண்டு மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று தான் கட்டிய கோவிலில் ஸ்ரீ அய்யனார் சுவாமியுடன் ஜீவ ஐக்கியமானார். அவர் ஐக்கியமான மஹா சிவராத்திரி அன்று குரு பூஜை விழாவாக நடைபெற்றுவருகிறது. மேலும் காசி, ரிஷிகேஷ், மதுரா போன்ற 350 புண்ணிய ஸ்தலங்களில் மஹா சிவராத்திரி அன்று ஆண்டு தோறும் அவர் நினைவாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.

சமுதாய மற்றும் ஆன்மீக பணிகளை இறைவன் உத்திரவு படி செய்து வருகிறோம்.